×

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியாவுக்கு கர்நாடக போலீஸ் சம்மன்..!!

பெங்களூர்: பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியாவுக்கு கர்நாடக போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளனர். குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு பட்டியலின மக்கள் வாக்களிக்க கூடாது என சமூக ஊடக பதிவு மூலம் அச்சுறுத்தியதாக புகார் எழுந்தது. இரு சமூகங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் வகையில் சமூக ஊடகத்தில் வீடியோ பதிவேற்றியதற்காக வழக்கு பதிவாகியது. கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா மீதும் அம்மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜே.பி.நட்டா, அமித் மாளவியாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பியது.

The post பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மாளவியாவுக்கு கர்நாடக போலீஸ் சம்மன்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,President ,JP Natta ,I.D. Karnataka Police Summons Division ,Amit Malaviya ,Bangalore ,I.D. Karnataka ,I.D. Karnataka police ,
× RELATED பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தகவல்...